புதுடெல்லி: இந்தியாவில் கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு, ஜனநாயகம் தடையாக இருக்கிறது என்று பேசியுள்ளார் நிதி ஆயோக் அமைப்பின் சிஇஓ அமிதாப் காந்த்.

கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல், சீனாவுடன் நாம் போட்டியிட முடியாது என்றும் அவர் பேசியுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, “இந்தியாவில் கடுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள, அதிக அரசியல் அழுத்தங்களை கடந்துவர வேண்டியுள்ளது. சுரங்கம், நிலக்கரி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் மத்திய அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

அதேசமயம், வேறு பல துறைகளில், தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதேசமயம், மாநில அரசுகளிடமிருந்தும் சீர்திருத்தங்கள் வர வேண்டும்.

உற்­பத்­தி­யு­டன் இணைந்த சலுகைத் திட்டத்திற்காக, அரசு, 10 முக்­கிய துறை­களை அடை­யா­ளம் கண்­டுள்­ளது. இந்தத் துறை­கள், இந்தி­யாவை உற்­பத்தி மைய­மாக மாற்­று­வ­தில் முக்­கிய பங்கு வகிக்­கும்” என்றார் அவர்.