சென்னை: தமிழ்நாட்டின் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த கொடுக்கப்பட்டுள்ள அவகாசம் இந்த மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில், அதை மேலும் 3 மாசம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,  2024ம்  ஆண்டு பிப்.29-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதிவாய்ப்பு  வழங்கி நகர ஊரமைப்பு இயக்குநர் ஏற்கனவே அறிவித்திருந்தார். “அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப் படுத்தும் திட்டத்தின் கீழ், கடந்த 2016 அக்.20-ம் தேதி அல்லது அதற்கு முன் பதியப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

“அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ், கடந்த 2016, அக்.20 அல்லது அதற்கு முன் பதிவுசெய்யப்பட்ட மனைப் பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைமற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல்  நவம்பருக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில்,  இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும், அனுமதி யற்ற மனைப்பிரிவு, மனைகளை வரன்முறைப்படுத்த அடுத்த வருடம் பிப்ரவரி 29-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும், , இந்தஇறுதி வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று  பொதுமக்களுக்கு வீட்டுவசதித்துறை மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து வீட்டுவசதித்துறை செயலர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப் படுத்தும் திட்டத்தின் கீழ், கடந்த 2016 அக்.20-ம் தேதி அல்லது அதற்கு முன் பதியப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப் படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இவற்றில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் வரும் 2024பிப்.29-ம் தேதி வரை விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு செய்து, கடந்த செப்.4-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவுசெய்யலாம். எஞ்சிய அனுமதியற்றமனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ளக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பைதவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.