நியூயார்க்:
டெல்டா வகை கொரோனா எளிதில் பரவும் என்று அமெரிக்க சுகாதார ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க சுகாதார ஆணையம் தெரிவிக்கையில், டெல்டா வகை கொரோனா வைரஸ் சின்னம்மை நோயை போல எளிதாக பரவக்கூடியது என்றும், அசல் வைரசை விட இந்த வைரஸ் 1000 மடங்கு ஆபத்தானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் 90% பாதுகாப்பை அளித்தாலும் இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதில் அவை பெரியளவில் செயல்படுவதில்லை என்றும் அமெரிக்க சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.