தஞ்சை:

டில்லியில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்டா விவசாயி களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தஞ்சாவூரில் நேற்று விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். அதைத் தொடர்ந்து டெல்டா மாவட்டம் முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நதி நீர் இணைப்பு, வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக  காவிரி உரிமை மீட்புக்குழுவினரும், தஞ்சை விவசாயிகளும் பேரணி யாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்காண வறட்சி நிவாரணம் ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை ஒருங்கிணைந்த வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கியுள்ளனர்.

அவர்களுக்க ஆதரவாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகளும் போராட்டத்தில் இணைந்து வருகின்றனர்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த இடத்தை விட்டு செல்வதில்லை என்று போராட்டக்குழு வினர் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக தஞ்சாவூரில் பரபரப்பு நிலவி வருகிறது.