டில்லி:

டில்லியில் வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்த வான பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த கெஜ்ரிவால் அரசு  முடிவு செய்துள்ளது. அதன்படி, 10 மணி நேரம் பார்க்கிங்கிற்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகரிப்பை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. தேசிய பசுமைத்தீர்ப்பாயமும், வாகனங்களை கட்டுப்படுத்த மாநிலஅரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து, வாகனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த, கார் பார்க்கிங் கட்டணத்தை  நான்கு மடங்கு உயர்த்தப்போவதாக டில்லி அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.  இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த திட்டம்  தொடர்பாக ஆராய மூத்த அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அடிப்படை பார்க்கிங் கட்டணம் (Basic Parking Fee (PPF) Group,) குழு என்ற பெயரில் அமைக்கப்பட்ட அந்த குழுவிரின் ஆய்வு அறிக்கையின் பார்க்கிங் கட்டணம் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி,  டில்லியில் 10 மணி நேரம் கார் பார்க்கிங் செய்ய ரூ.1000 கட்டணம் வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டி ருந்தது. இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தி உள்ளது.

டில்லியில், சுமார், 3.3 மில்லியன் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 7.3 மில்லியன் இருசக்கர வாகனங்கள் உள்ளன. தினசரி கிட்டத்தட்ட 500 புதிய வாகனங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் நகரத்தில் அதிகரிக்கும் மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கிலும், வாகன பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், இந்த புதிய பார்க்கிங் கட்டணம் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

இந்த புதிய பார்க்கிங் கட்டணம் அக்டோபர் 16ந்தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 4 சக்கர வாகனங்களுக்கு வேலைநாளில் 10 மணி நேரம் பார்க்கிங் கட்டணம் ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே குறைந்த பட்ச கட்டணமாக மணிக்கு ரூ.10 முதல் 20 வரை இருந்து வந்த நிலையில், தற்போது திடீரென மணிக்கு ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ள பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.