2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அட்மிஷன் கிடையாது.. பள்ளி நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

Must read

டெல்லி:

மேற்கு டெல்லியில் ஒரு பள்ளியின் நிபந்தனையை கண்டு பெற்றோர் பலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சிக்கு இது தான் காரணம்…….

டெல்லியில் உள்ள 298 தனியார் பள்ளிகளில் கடந்த 2ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது.
இடபிள்யூஎஸ் மற்றும் டிஜி என இரு பிரிவுகளாக நடக்கிறது. விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை முடிந்து முடிவுகள் மார்ச் 15, 13ம் தேதிகளில் வெளியாகவுள்ளது.


மேற்கு டெல்லி ராஜேந்திரா நகரில் உள்ள சல்வான் பள்ளிக்கு சல்வான் மான்டெசிரி மற்றும் ஜிடி சல்வான் என இரண்டு கிளைகள் உள்ளன. இதில் மாணவர் சேர்க்கைக்கான பதிவு விண்ணப்பம் வழங்கும் தொடங்கியுள்ளது. இதற்கான நிபந்தனைகளில் முக்கிய நிபந்தனையாக இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே இவ்வாறு செய்வதாக பள்ளி சேர்மன் சுஷில் சல்வான் தெரிவித்துள்ளார். அதேபோல் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள பெற்றோருக்கு பள்ளியில் வேலைவாய்ப்பும் கிடையாது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article