டில்லி

டில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகவும் மோசமாக இருப்பதால் இரு தினக்களில் தேவையான ஆக்சிஜனை அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவலில் நாடெங்கும் கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  உலகில் அதிக அளவில் தினசரி பாதிப்பு உள்ள நாடாக இந்தியா உள்ளது.   நோயாளிகள் அதிகரித்ததால் மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.  இதனால் நாடெங்கும் கடும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  குறிப்பாகத் தலைநகர் டில்லியில் இது மிகவும் தீவிரமாக உள்ளது.

எனவே இது குறித்து பலரும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.  இந்த மனு அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு, “நாளுக்கு நாள் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.  பல மருத்துவமனைகளில் மருத்துவர்களும் மரணம் அடைந்துள்ளனர்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விட்டது.    தற்போது தலைக்கு மேல் வெள்ளம் செல்லும் நிலையில் இனி எல்லாவற்றையும் தயார் செய்ய வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளது.    இனியும் இந்த கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க முடியாது. மத்திய அரசு ஏற்கனவே டில்லிக்குத் தினசரி 490 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்படும் என உறுதி அளித்தது.

அந்த வாக்குறுதியைக் காக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்[பாகும்.  மத்திய அரசு என்ன செய்தாவது தினசரி 490 டன் ஆக்சிஜன் இன்னும் இரு தினங்களில் ஏற்பாடு செய்யவேண்டும்.   இந்த உத்தரவை நிறவேற்றாவிட்டால் உச்சநீதிமன்றம் அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கும்” என உத்தரவு இட்டுள்ளது.