கேரள தங்கக்கடத்தல் வழக்கு: சென்னையில் தீவிர விசாரணை நடத்தும் டெல்லி என்ஐஏ குழு

Must read

சென்னை: தங்கக்கடத்தல் குறித்து விசாரிக்க, டெல்லியிலிருந்து என்.ஐ.ஏ. பெண் அதிகாரி டிஐஜி வந்தனா தலைமையில் 8 போ் கொண்ட குழுவினா் சென்னை வந்துள்ளனர்.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளிடம். விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு சென்னை விமான நிலையத்தில் பெரிய அளவில் கடத்தப்பட்ட தங்கம் மற்றும் விமான நிலைய வளாகத்தில் கேட்பாரற்று கிடந்த தங்கம் உள்ளிட்டவை குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர்.

மேலும்,  தங்கக்கடத்தல் வழக்குகளில்  கைதானவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து, இந்த கடத்தல் சம்பவங்களுக்கும் ஸ்வப்னா சுரேஷுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, கேரளாவில் கடந்த சில வாரங்ளுக்கு முன் 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ கடத்தல் தங்கம் கிடைத்தது. இந்த விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரை கைது செய்யப்பட்டு, கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வரும் 21ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article