டெல்லி:

டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண்கள் தற்காப்புக்காக கத்தி எடுத்துச்செல்ல மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியன் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. டெல்லியை தொடர்ந்து பெங்களுரு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த செய்திகள் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற தோற்றம் உருவாக தொடங்கிவிட்டது. இதை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு பல திட்டங்களை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக டெல்லி ரயில்களில் பயணிக்கு பெண்கள் கத்தி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லி மெட்ரோ ரயில்வே நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

டெல்லி மெட்ரோ ரயில்களில் பெண்கள் பயணிக்கும் போது தற்காப்புக்காக கத்தி எடுத்துச் செல்லலாம். நான்கு அங்குலம் (இஞ்ச்)அளவுக்கு குறைவான அளவுள்ள கத்திகளை பெண்கள் வைத்துக் கொள்ளலாம். பெண்களை தொடர்ந்து சக பயணிகளும் தீப்பெட்டி மற்றும் லைட்டர் கொண்டுச் செல்லவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
பெண்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு சில பொருட்களுக்கு மத்திய பாதுகாப்பு படையினர் விலக்கு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.