டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு கைமீறி சென்றுள்ள நிலையில், மாநில துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், தனக்கு லேசான கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனால் வீட்டில் தனிமைப்படுத்தக்கொண்டு சிகிச்சை பெறுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா சோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருப்பதுடன், வீட்டிலிருந்தே பணிகளை தொடர்வேன் என்றும் குறிப்பட்டுள்ளார்.