டெல்லி:  கொரோனா தடுப்பூசி விலை உயர்வு குறித்து கடுமையா விமர்சித்த உச்சநீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் தடுப்பூசி விலையை நிர்ணயிப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் மற்றும் மருந்துகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி விலை உயர்வு தொடர்பாக தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்திவரும் உச்சநீதிமன்றம், கொரோனா தடுப்பூசியின் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், வெளிநாடுகளில் குறைந்த விலையில் கிடைக்கும்போது, இங்கு ஏன் ரூ.400க்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியது.

தொடர்ந்து, மத்தியஅரசுக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றதுடன்,   தடுப்பூசி விநியோக திட்டத்தின் கட்டுப்பாடு மத்திய அரசின் கையில் இருக்க வேண்டும் என்றுவலியுறுத்தியதுடன்,  தடுப்பூசிக்கான விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது.

தனியார் நிறுவனங்கள் நிர்ணயித்தால் தடுப்பூசியின் விலை எப்படி ஒரே மாதிரியாக இருக்கும்?

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக எழுத்தறிவற்ற மக்கள் எப்படி பதிவு செய்வார்கள்?

மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை சேர்ப்பதற்கு மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது?

கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மொத்தமாக வாங்கி தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு ஏன் விநியோகிக்கக்கூடாது?

என்று அடுக்கடுக்கா கேள்விகளை எழுப்பியதுடன்,  தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.