டெல்லி:
உச்சநீதி மன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதியாக மூத்த உச்சநீதி மன்ற நீதிபதியாக எஸ்ஏ. பாப்டே இன்று பதவி ஏற்றார். அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் (18-11-2019) முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து 47வது புதிய நீதிபதியாக மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே-ஐ (வயது 63) குடியரசுத் தலைவர் நியமனம் செய்து அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக, நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
எஸ்ஏ பாப்டே, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவரது குடும்பத்தில் பெரும்பாலோர் வழக்கறிஞர்களே. நாக்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்த எஸ்.ஏ.பாப்டே உச்ச நீதிமன்றத்தில், 21 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றினார். 2013ல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். தற்போது தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் அயோத்தி நிலம் வழக்கு, தனிமனித சுதந்திரம் உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளித்து உள்ளார். இவர் வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். பாப்டேவின் தந்தை அரவிந்த் ஸ்ரீநிவாஸ் பாப்டே பிரபலமான மூத்த வழக்கறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]