டெல்லி: மாசு அதிகரிப்பதால், மக்கள்  வாழ முடியாத நகரமாக தலைநகர் டெல்லி மாறி வருகிறது. அப்படி இருக்கும்போது டெல்லி  ஏன் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 500-ஐ நெருங்கியுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த மாநில ஆம்ஆத்மி அரசு உத்தரவிட்டு உள்ளது.  டெல்லி அருகே உள்ள  பஞ்சாப் உள்பட சில மாநிலங்களிலும் மாசு அதிகரித்து காணப்படுகிறது.  காற்று மாசு அதிகரிப்பு காரணமாக சாமானிய மக்களின்  இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகின்றது.

தற்போது தலைநகர் டெல்லியில் நிலவும் காற்று மாசுவானது,  ஒரு நாளைக்கு 40 சிகெரெட்டுகளை புகைப்பதால் ஏற்படும் தீங்குகளுக்கு ஈடாகும் என்று எச்சரிக்கப் பட்டு உள்ளது.  டெல்லியில் உள்ள காற்றின் தரம் நேற்ற  [செவ்வாய்கிழமை]500-ஐ நெருங்கியுள்ளது. இதனால் பலருக்கு சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டு வரகின்றனர். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநில  எம்.பி.யுமான,  காற்று மாசுவால் பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லி இனிமேலும் நாட்டின் தலைநகரா இருக்க வேண்டுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது  சமூக வலைதள பக்கத்தில்  வெளியிட்டுள்ள  பதிவில், ‘உலகின் அதிக மாசுபட்ட நகரமாக டெல்லி அதிகாரப்பூர்வமாகவே மாறி யுள்ளது. உலகின் இரண்டாவது அதிக மாசுபட்ட நகரமான டாக்கா [வங்க தேசம் தலைநகர்] நகரை விட 4 மடங்கு அதிகமான நச்சு டெல்லி காற்றில் உள்ளது.

பல ஆண்டுகளாக இந்த கொடுங்கனவை நாம் எதிர்கொண்டு வந்தாலும் நமதுஅரசு அத பற்றி ஏன் எதையும் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிய வில்லை. பல வருடங்களாக நமது அரசாங்கம் இந்தக் கனவைக் கண்டும், அதற்கு எதுவுமே செய்யவில்லை என்பது மனசாட்சிக்கு விரோதமானது.

நானும் கட்ந்த  2015 முதல் எம்.பி.க்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் தரம் குறித்து  வட்ட மேஜை கூட்டங்களை நடத்திவந்தேன், ஆனால் அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை, எனவே கடந்த வருடம் அதைக் கைவிட்டுவிட்டேன்.

இந்த நகரம் (டெல்லி) நவம்பர் முதல் ஜனவரி வரை காலக்கட்டங்களில் மக்கள்  வசிக்கவே முடியாத நகரமாகிவிடுகிறது. ஆண்டின் மற்ற மாதங்களில் ஏதோ வாழலாம் என்றுதான் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், டெல்லி இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

[youtube-feed feed=1]