அகமதாபாத்: டெல்லி அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 172 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

அந்த அணியின் டி வில்லியர்ஸ், அதிகபட்சமாக 75 ரன்களை(42 பந்துகள்) அடித்தார். அதில், 5 சிக்ஸர்கள் & 3 பவுண்டரிகள் அடக்கம். பட்டிடார் 22 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டானார். முடிவில், பெங்களூரு அணி, 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து, 171 ரன்களை சேர்த்தது.

தற்போது, சற்று சவாலான இலக்கை நோக்கி ஆடிவரும் டெல்லி அணி, 53 ரன்களுக்கு, 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதேசமயம், 9 ஓவர்கள் நிறைவடைந்துள்ளன.

பிரித்வி ஷா 21 ரன்களுக்கும், தவான் 6 ரன்களுக்கும், ஸ்மித் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்துள்ளனர். கேப்டன் ரிஷப் பன்ட், ஸ்டாய்னிஸ் தற்போது களத்தில் உள்ளனர்.

தற்போதைய நிலையில், அந்த அணி, வெற்றிக்கு, 66 பந்துகளில் 119 ரன்களை எடுக்க வேண்டியுள்ளது.