டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்பனை செய்த மத்தியஅரசின் நடவடிக்கைக்கு எதிராக, பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன்சாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை மத்தியஅரசு ஏலம் விட்டது. இதில், டாடா நிறுவனம் பிட்டை கைப்பற்றியது. ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ. 18 ஆயிரம் கோடிக்கு டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் வாங்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த 1953-ம் ஆண்டு மத்திய அரசு நாட்டுடைமை ஆக்கிய நிலையில், தற்போது ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா கைவசமே சென்றுள்ளது.
இதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி மனுத்தாக்கல் செய்திருந் தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்து உள்ளது.