டில்லி,

ஆர்.கே. நகர் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிய மனுவை டில்லி உயரநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.

இதற்கிடையே தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த ரபீக் என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்

“ஆர்.கே. நகர் தொகுதியில் பெரும் பணம் புழங்குவதாகவும், அங்கு தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்த அவர், இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதி மன்றம் இன்று, மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டது. மேலும் ஆர்.கே. நகர் தேர்தல் நடத்த எந்தவித தடையும் இல்லை என்றும் தெரிவித்தது

[youtube-feed feed=1]