டில்லி

மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட பி எம் நரேந்திர மோடி திரைப்டத்தை வெளியிட தடை விதிக்க டில்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம் பி எம் நரேந்திர மோடி.   இந்த திரைப்படத்தை சுரேஷ் ஒபராய் மற்றும் சந்தீப் சிங் தயாரித்துள்ளனர்.  ஓமுங் குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விவேக் ஓபராய் பிரதமர் மோடி வேடத்தில் நடித்துள்ளார்.    இந்தப் படம் வரும் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.

மக்களவை தேர்தல் வரும் 11 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.   இந்நிலையில் பிரதமரின் பயோபிக் வெளியாவதை எதிர்ககட்சிகள் விரும்பவில்லை.   இதுவும் ஒருவகை தேர்தல் பிரசாரம் என சொல்லப்பட்டு வந்தன.

இது குறித்து டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.  அதை ஒட்டி டில்லி உயர்நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் உள்ளிட்டோருக்கு நோட்டிஸ் அனுப்பியது.   இந்த நோட்டிசுக்கான பதில் மனுக்களை பரிசீலனை செய்த பிறகு டில்லி உயர்நீதிமன்றம் இந்த திரைப்படம் வெளிவர தடை விதிக்க மறுத்துள்ளது.

இதனால் பி எம் நரேந்திர மோடி திரைப்படம் வரும் 5 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.   இந்த திரைப்படம் 23 மொழிகளில் வெளியாக உள்ளது.