டில்லி

ரு இரண்டு வயது பெண் குழந்தையைப் பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு வழக்குப் பதிவதில் ஏற்பட்ட தாமதத்தைக் காரணம் காட்டி டில்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.

டில்லியில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்த இரண்டரை வயது பெண் குழந்தையை சிவசந்தர் என்பவர் பலாத்காரம் செய்ய முயன்றதாக ஒரு புகார் அந்த குழந்தையின் தந்தையால் அளிக்கப்பட்டது.  அந்த புகாரில் தந்தை தனது வீட்டுக்குள் நுழையும் போது அந்த மனிதர் தனது பேண்ட் ஜிப்பை கழற்றி தனது ஆணுறுப்பை அந்த குழந்தையின் வாயில் திணிக்க முயன்றதாகக் கூறப்பட்டிருந்தது.

மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளோர் சேர்ந்து அவரை அடித்து காவல்நிலையத்தில் ஒப்படத்தகாகவும் அப்போது சிவசந்தர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.  தெற்கு டில்லி காவல் நிலையத்தில் பதியப்பட்ட இந்த வழக்கை டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் ரைத் விசாரித்து வந்தார்.

வழக்கு விசாரணையில் நீதிபதி இந்த வழக்கில் ஒரு சில முரண்பாடுகள் தெரிவதாகக் குறிப்பிட்டிருந்தார்.  குறிப்பாகக் குற்றம் சாட்டப்படவரை யாரும் அடித்த காயங்கள் இல்லை எனவும் அவர் குடித்திருந்தார் என்பதற்கான தடயம் மருத்துவ அறிக்கையில் காணப்படவில்லை என நீதிபதி தெரிவித்தார்.   மேலும் இந்த புகார் அளித்து சுமார் 8 மணி நேரத்துக்கு பிறகே முதல் தகவல் அறி9க்கை பதியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீதிபதி அந்த குழந்தையின் தந்தை ஒரு படித்த விவரமானவர் என்னும் போது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவதில் ஏன் அக்கறை காட்டவில்லை எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.   எனவே குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ.15000 சொந்த ஜாமீனிலும் அதே அளவில் மற்றொருவரின் ஜாமீனிலும் விடுதலை அளித்துள்ளார்

ஏற்கனவே இதற்கு முன்பு சில வழக்குகளில் முதல் தக்வல் அறிக்கை அல்லது வழக்கு  பதிவதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்ட போதிலும் அதை ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.  அந்த வழக்குகளில் இதை குற்றவாளிக்கு சாதகமாக எந்த நிலையிலும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டதில்லை..