டில்லி

தானி குழுமம் சம்பந்தப்பட்ட நிலக்கரி இறக்குமதி ஊழல் விசாரணையை நிறுத்தியது ஏன் என சிபிஐக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

அதானி குழுமம் நடத்தியதாக கூறப்படும் ரூ.30000 கோடி அளைவிலான நிலக்கரி இறக்குமதி ஊழல் விசாரணையை சிபிஐ நிறுத்தி விட்டதாக டில்லி  உயர் நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.   அவர் தனது வழக்கு மனுவில், “கடந்த 2008 முதல் 2010 வரை நிலக்கரி இறக்குமதியில் அதிக விலை கொடுத்ததால் பொதுமக்கள் அதிக அளவில் மின்சாரக் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டது.

இந்த ஊழலில் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.   அவற்றில் அதானி குழுமம் முதன்மையானது.   இந்த நிறுவனங்கள் மீது முதல்கட்ட விசாரணை நடத்த உள்ளதாக சிபிஐ அறிவித்தது.   அத்துடன் இது குறித்து அதானி நிறுவனத்துக்கு சிபிஐ நோட்டிஸ் அனுப்பி வைத்தது.   இந்த ஊழல் நிகழும் போது சிபிஐ இயக்குனராக ரஞ்சித் சின்ஹா இருந்துள்ளார்.  இவரை குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் இரவில் சந்தித்துள்ளனர்.   அதன் பிறகு சிபிஐ தனது முதல்கட்ட விசாரணையை கைவிட்டுள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் ஏ கே சாவ்லா ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.   இந்த அமர்வு, “காரணம் இன்றி இந்த ஊழல் வழக்கில் முதற்கட்ட விசாரணையை சிபிஐ ஏன் நிறுத்தி வைத்துள்ளது?    அதிக விலை வைத்து நிலக்கரியை விற்ற நிறுவன அதிகாரிகளுடன் சிபிஐ இயக்குனர் சந்திப்பு எதற்காக நடைபெற்றது?   இது குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” என வினாக்கள் எழுப்பியதுடன் இதற்கான விளக்கத்தை இன்னும் இருவாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.