
டில்லி
தொப்பி சின்னம் கோரி தினகரன் தொடர்ந்த வழக்கு விசாரணை நான்காம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட மதுசூதனன் வேட்பு மனு அளித்துள்ளார். டி டி வி தினகரன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அவருக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த தொப்பி சின்னத்தை மீண்டும் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளார். இது குறித்த வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
தேர்தல் ஆணையம் விசாரணையின் போது தொப்பிச் சின்னம் தேவை என தினகரன் மட்டுமே கேட்டிருந்தால் அது ஒதுக்கப்படும் என அறிவித்தது. ஆனால் ஏற்கனவே 3 சுயேட்சை வேட்பாளர்கள் தொப்பி சின்னம் கேட்டுள்ளதை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் சுட்டிக் காட்டி உள்ளனர். அந்த மூன்று சுயேட்சைகளும் திட்டமிட்டு தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளதாக தினகரன் தரப்பு தெரிவித்தது.
டில்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் இப்போது இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளது. வழக்கின் விசாரணையை 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. வழக்கு விசாரணை நான்காம் தேதி முடிந்தால் தொப்பி சின்னம் பற்றிய தீர்ப்பு வழங்கப் படலாம் என தெரிய வருகிறது.
[youtube-feed feed=1]