டெல்லி: விவசாயிகளை கைது செய்து அடைக்க பவானா மைதானத்தை தர முடியாது  என  மத்தியஅரசுக்கு  டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசு பதில் அளித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி, லக்கிம்பூர் கேரி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரியாணா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். முன்னதாக மத்தியஅரசுக்கும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால், விவசாயிகள் தங்களது போராட்டங்களை தொடங்கி உள்ளனர். ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து தடைகளை மீறி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டுள்ளனர். மாநிலங்களிலிருந்து ஏராளமான டிராக்டர்களில் இன்று காலை முதல் தலைநகர் டெல்லியை நோக்கி விவசாயிகள் சென்று கொண்டிருக்கின்றனர்.  பலர் இரு சக்கர வாகனங்களிலும் சென்றுகொண்டிருக்கின்றனர்.

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க டெல்லியில் உள்ள சிங், திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி வரும் விவசாயிகளை கைது செய்வதுடன், அவர்கள்மீது கண்ணீர்புகை குண்டு வீசி கலைத்து வருகின்றன.

இதற்கிடையில், கைது செய்யப்படும் விவசாயிகளை அடைத்து வைக்க டெல்லியில் உள்ள  பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் வகையில் மத்தியஅரசு, டெல்லி  மாநில அரசிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால், அதை ஏற்க ஆம்ஆத்மி அரசு மறுத்து விட்டத.  மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது

போராமுடும் விவசாயிகளைக் கைது செய்வது தவறானது என்று  டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் மத்திய அரசுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளதுடன், விவசாயிகளின் கோரிக்கைகள் உண்மையானவை, அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அரசியல் சாசன உரிமை என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி கன்வீனர் கோபால் ராய், நமது நாடு விவசாய நாடு என்று கூறப்படுகிறது. இந்திய விவசாயிகள் கொளுத்தும் வெயிலிலும், உறையும் குளிரிலும், மழையிலும் வியர்வை சிந்தி தானியங்களை உற்பத்தி செய்து, கிராம பட்வாரி முதல் பிரதமர் வரை அனைவரின் வயிற்றையும் நிரப்ப உழைக்கிறார்கள்.  சாதி, மதம், பிரதேசம், அந்தஸ்து, பாலினம், வயது வேறுபாடின்றி இந்நாட்டு மக்களுக்கு உணவு தானியங்களை உற்பத்தி செய்கின்றனர்.

ஆனால் பிப்ரவரி 13-ம் தேதி விவசாயிகளின் டெல்லி அணிவகுப்பைத் தடுக்க, பாஜகவின் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், ஹரியானா பாஜக அரசு, ஆங்கிலேயர்களை விட கொடூரமான தந்திரங்களைக் கடைப்பிடிக்கிறது, இது இன்று அடிமை காலத்தை நினைவூட்டுகிறது, இன்று, சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஆன்மாக்கள் பார்த்துக் கொண்டிருந்தால், சுதந்திர இந்தியாவில் மத்திய அரசு தங்களுக்கு உறுதியளித்ததைக் கேட்டு அமைதியான முறையில் விவசாயிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை அவர்களால் நம்பவே முடியாது. விவசாயிகள் அமைதியான முறையில் டெல்லிக்கு வர விரும்புவதால், அவர்களைத் தடுக்க சாலைகள் மறியலில் வைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை இவ்வளவு வலுவான சுவர்கள் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கூட கட்டப்படவில்லை, என்று கூறியவர்,  மக்களவைத் தேர்தலில் பாஜக 400-ஐத் தாண்டினால் அது நாட்டிற்கு துரதிர்ஷ்டம் என்றும்  கூறினார்.