புதுடெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான 70 வேட்பாளர்களின் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி 14 ஆம் தேதி அறிவித்துள்ளது. புது தில்லி சட்டமன்றத் தொகுதியில் இருந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பட்பர்கஞ்ச் தொகுதியில் இருந்து துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா ஆகியோரை நிறுத்துகிறது.
கடந்த தேர்தலில் நின்று தோற்ற திலீப் பாண்டே, அடிஷி மற்றும் ராகவ் சந்தே ஆகியோரும் இந்த்த் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் பாண்டே திம்மர்பூர் தொகுதியிலிருந்தும் அடிஷி தொகுதியிலிருந்தும் சந்தா ராஜேந்திர நகரிலிருந்தும் போட்டியிடுகின்றனர். இந்தட் தகவலை கட்சியின் அரசியல் விவகாரக் குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் நடப்பு எம் எல் ஏக்கள் 15 பேருக்குப் பதில் மற்றவருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மேலும் அது குறித்து சிசோடியா கூறும்போது 70 தொகுதிகளுக்குமான பரிந்துரைக்கப்பட்டப் பட்டியலுக்குக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 46 தொகுதிகளில் நடப்பு எம் எல் ஏக்கள் போட்டியிட, 15இல் புதிய நபர்களும், வெற்றிடமாயுள்ள 9 தொகுதிகளில் புதியவர்களும் போட்டியிடுவார்கள் என்றார்.
மேலும் அவர் கூறும்போது இந்த்த் தேர்தலில் 8 பெண்கள் போட்டியிடுவதாகவும் கடந்த்த் தேர்தலின் போது 6 பெண் வேட்பாளர்களே போட்டியிட வாய்ப்பு கிடைத்தாகவும் கூறினார்.
இந்த அறிவிப்பு நிகழ்ந்த உடன் “அனைவருக்கும் வாழ்த்துக்கள். மனநிறைவு கொள்ளாதீர்கள், கடினமாக உழைக்க வேண்டும். மக்களுக்கு ஆம் ஆத்மி மற்றும் உங்கள் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. கடவுள் ஆசீர்வதிப்பார்” என்று ட்வீட் செய்துள்ளார். என்றாலும் இந்தத் தேர்தலானது எல்லாக் கட்சிகளுக்கும் பெரும் சவாலான ஒன்றாகவே இருக்கப் போகிறது.