டெல்லி: டெல்லியில் கொரோனாவுக்கு எதிரான போரை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான நாடுகள் கொரோனாவின் பிடியில் உள்ளன. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பிடிக்கும் முயற்சியில் முன்னணி நாடுகள் இறங்கி உள்ளன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது.

கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்து அதிர்ச்சி அளித்துள்ளது. தலைநகர் டெல்லியிலும் பாதிப்புகள் ஓயவில்லை. கடந்த சில வாரங்களாக குறைந்து காணப்பட்ட கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது.

4 நாட்களில் பாதிப்பு 10,000ஐ கடந்துள்ளது. ஒரே நாளில் 2,914 பேர் பாதிக்கப்பட  மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று முதலமைச்சர் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது:

கொரோனாவுக்கு எதிரான போரை டெல்லி அறிவித்துள்ளது.  பரிசோதனை நடவடிக்கைகள் இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளன. சந்தைகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகிறது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது. பரிசோதனைகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் கவலைப்பட வேண்டாம் என்று குறிப்பிட்டு உள்ளார்.