டில்லி
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது.

இந்தியாவில் வேகமாக கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.
இதில் டில்லி மூன்றாம் இடத்தில் உள்ளது.
இங்கு சுமார் 29000 பேர் பாதிக்கப்பட்டு 800க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளது.
எனவே அவருக்கு நாளை கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்
Patrikai.com official YouTube Channel