உலகின் மலிவான மற்றும் விலை அதிகமான நகரங்களில் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் மலிவான நகரங்களில் இந்தியாவை சேர்ந்த 3 மாநிலங்கள் இடம் பிடித்துள்ளது.‘
இதில் சென்னை 8வது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, டில்லி ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளது.
உலகிலேயே மிக மலிவான நகரமாக சிரியாவின் டமாஸ்கஸ் சிட்டி தேர்வாகி உள்ளது. அதைத் தொடர்ந்து, வெனிசுவேலாவின் தலைநகரம் கராகஸ் மற்றும் கஜகஸ்தான் வணிக மையம் அமைந்துள்ள அல்மாடி ஆகியவை முறையே இரண்டாம் மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
மேலும் மலிவான நகரங்களில் லாகோஸ் 4வது இடத்தையும், பெங்களூரு 5வது இடத்திலும், கராச்சி 6வது இடத்தையும், அல்ஜீரியா 7வது இடத்திலும், சென்னை 8வது இடத்தையும், புஜாரஸ்ட் 9வது இடத்தையும், டில்லி 10வது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, விலை மிகுந்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை பெற்றுள்ளது. இது தொடர்ந்து 5வது ஆண்டாக முதலிடத்திலேயே இருந்து வருகிறது.
அதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தை பாரிசும், 3வது இடத்தில் ஜூரிச், ஹாங்காங் 4வது இடத்திலும்உள்ளது. மேலும், ஓஸ்லோ 5வது இடத்திலும், ஜெனிவா 6வது இடத்தையும், சியோல் 7வது இடத்திலும், கோபன்ஹகன் 8வது இடத்தையும், டெல் அவிவ் 9வது இடத்திலும், சிட்னி 10வது இடத்திலும் உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.