டெல்லி: 70 தொகுதிகளைக்கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 5மணியுடன் தேர்தல் பிரசாரம் ஒய்வுபெறுகிறது.

டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை மறுநாள் (பிப்ரவரி 5ந்தேதி) நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆத்ஆத்மி கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முயற்சித்து வருகின்றன. இதனல், அங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது.
இந்த 70 தொகுதிகளுக்கான தேர்தலில் மொத்தம் 699 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக முன்னாள் முதல்வரும், ஆளும் ஆம்ஆத்மி கட்சித் தலைவருமான கெஜ்ரிவால் போட்டியிடும் தொகுதியில் 23 பேர் போட்டியில் உள்ளனர். இதையொட்டி அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் நடந்து வரும் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. மேலும், இன்று மாலை முதல் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான ஆவனங்கள் எடுத்துச்செல்லும் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், வாக்குச்சாவடிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள், மற்றும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடப்பதை உறுதி செய்யும் வகையில், டெல்லி முழுவதும் மட்டுமின்றி டெல்லியின் எல்லைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.