டெல்லி: கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், வருமானத்தை ஈட்டித்தரும் மதுபான விற்பனையை ஆன்லைன் மூலம் விற்று, டோர் டெலிவரி  செய்வது குறித்து கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்காக மொபைல் ஆப்  உருவாக்கி இருப்பதுடன்,  கலால் சட்டத்தில் திருத்தம் செய்யவும் தயாராகி வருகிறது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், அரசுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் வணிகமாக மதுபான விற்பனை செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலும்,  அரசுக்கு வருமானத்தை அள்ளித்தருவது டாஸ்மாக் மதுபான கடைகள்தான். ஆனால், தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மதுபானக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால், அரசுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும், கள்ளச்சந்தை விற்பனை மற்றும் கள்ளச்சாராயம் விற்பனையும் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஆண்டு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபொது டெல்லி உள்பட பல மாநிலங்களில், மது பிரியர்கள்  மது வாங்க நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தது. கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டதால் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ளலாம் என அப்போது உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்தது.

இதையடுத்து,  மதுபிரியர்களின் ஆசையை பூர்த்தி செய்யவும், அரசுக்கு வருமானத்தை ஈட்டவும், டெல்லி அரசு,  மொபைல் ஆப் மற்றும் ஆன்லைன் வழியாக மது விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஆன்லைன் மூலம்,  ஆர்டர் கொடுத்தால் வீட்டுக்கே மதுவை டோர் டெலிவரி செய்வதற்கு டெல்லி அரசு வழிவகை செய்துள்ளது.

இதற்காக கலால் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்போகிறது டெல்லி அரசு. இதன் பின்னர் ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப் வழியாக மது விற்பனை செய்தால் வீட்டுக்கே மது வகைகள் டெலிவரி செய்யப்படும். ஆனால்,  டெல்லியில் உள்ள அனைத்து கடைகளில் இருந்தும், ஆன்லைன் மூலம் மது வாங்க முடியாது என்றும்,   L-14 உரிமம் வைத்துள்ள கடைகள் மட்டுமே ஆன்லைனில் மது விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படும் என்றும்அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த ஆண்டு (2019) கொரோனா பொதுமுடக்கத்தின்போது, சில மாநிலங்கள் ஆன்லைன் மது விற்பனையை  தொடங்கின. சத்திஸ்கர் மாநில அரசு  ஆன்லைன் மது விற்பனையை தொடங்கி உள்ளது. இதையடுத்து,  டெல்லி அரசும் ஆன்லைனில் மது விற்பனை செய்ய முன்வந்துள்ளது.

தமிழகத்திலும் விரைவில் ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக தெரிகிறது.

ஆன்லைன் மூலம் டாஸ்மாக் மது விற்பனை செய்ய தமிழகஅரசு திட்டம்?

 

இந்தியாவில் மதுபானங்களை டெலிவரி செய்ய அமோசன், பிக்பாஸ்கெட்க்கு அனுமதி…