டெல்லி: டெல்லியில் காற்றின் வேகம் சிறிது அதிகரித்ததால், மாசின் அளவு சற்று வீழ்ச்சி அடைந்தது.

தலைநகர் டெல்லியில்  சில நாட்களாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. அதனால்,  சிறுவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வரும் 5ம் தேதி வரை அரசு பள்ளிகள், அரசின் உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளுக்கு டெல்லி அரசு விடுமுறை அறிவித்து இருக்கிறது.

காற்று மாசு  அதிகரிக்க காரணம், வாகனப் புகை மற்றும் அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளே ஆகும். நடப்பு ஆண்டில் இல்லாத அளவிற்கு காற்று மாசுக் குறியீடு தற்போது அதிகப்படியாக இருக்கிறது.

அதே நேரத்தில் சனிக்கிழமை காற்றின் வேகம் சிறிது அதிகரித்ததால், மாசின் அளவு சற்று வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும் நிலைமை இன்னும் சீராகவில்லை.

முன்னதாக, உச்ச நீதிமன்றம அமைத்த சுற்றுச்சூழல் மாசுக் கட்டுபாட்டு ஆணையம், பொது சுகாதார அவசர நிலையை அறிவித்தது. சில புதிய யோசனைகளையும் கூறியிருக்கிறது.

பொதுமக்கள் அதிக தண்ணீர் அருந்த வேண்டும், வாழைப்பழம் போன்ற பழவகைகளையும், கீரை போன்ற பச்சை காய்கறிகளையும் அதிகம் உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்ஹேலர், நெபுலேசர் போன்ற மூச்சு கருவிகளை தயாராக இருக்க வேண்டும், கதவு, ஜன்னல்களை சரியாக மூடி வைத்து, சுடுதண்ணீரை கொண்டு ஆவி பிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.