புதுடெல்லி: 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மலிவு மற்றும் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு சமமான தடுப்பூசி அணுகல் கொள்கையை வரையறுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா விரைவில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை,  ஆனால் அதன் மூலோபாயத்தை அரசாங்கம் இப்போதே வெளியிட வேண்டும்.

கொரோனா வைரசுக்கான மருந்தை பெருமளவில் தயாரிக்கும் நாடாக இருக்கும் நிலையில், அதனை தெளிவாக வரையறுத்து சமமான தடுப்பூசி, அணுகல் உத்தி, கிடைக்கும் தன்மை நியாயமான விணியோகம், ஆகியவற்றை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனவைரஸ் தடுப்பூசியின் மனித சோதனைகள் நடைபெற்று வருகின்றன, என்பது குறிப்பிடத்தக்கது.