சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

71வயதான நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் பல ஆண்டுகளாக உடல்நலம் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல்நலக்குறைவால்  சென்னை மியாட் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுதப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள் ளநிலையில், அவரது உடல் விருகம்பாக்கம் வீட்டில் பொதுமக்கள் , அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

விஜயகாந்தின் மரணச் செய்தியை அறிந்த தேமுதிக தொண்டர்களும் அவரின் ரசிகர்களும் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர். மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. அதில், தேமுதிக நிறுவனர் திரு விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

சினிமா மற்றும் அரசியல் ஆகிய இரு துறைகளிலும் அவர் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் சந்தேகத்திற்கு இடமின்றி மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் ஒரு நீடித்த பாரம்பரியத்தை பொறித்துள்ளன.

இந்த இக்கட்டான நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.