நெட்டிசன்

வாட்ஸ்அப் பதிவு

நாளை தீபாவளி பண்டிகை. இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி நாடு முழுவதும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் உலகெங்கும் வாழும் இந்தியர்களும் தீபாவளியை வெடியுடன், இனிப்பு சாப்பிட்டு, கொண்டாடி மகிழ்கின்றனர்.

நமது பாரத பூமி முழுவதும் கொண்டாடப்படும் முதன்மையான பண்டிகை தீபாவளி தான்.இப்பண்டிகை இந்துக்களால் மட்டும் அல்ல இந்தியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் ஒரே பண்டிகை தான் தீபாவளி.

நீரின் அருமை பயிரில் தெரியும்! நிலத்தின் அருமை விளைச்சலில் தெரியும்! கல்வியின் அருமை பதவியில் தெரியும்! காசின் அருமை வறுமையில் தெரியும்! பண்டிகையின் அருமைகள் பண்டிகைய் வந்தால் தான் தெரியும்.

வட இந்தியர்கள் தீபாவளி இலக்குமிக்கு உரிய நாள். அவர்களது புத்தாண்டின் தொடக்க நாள். வணிகர்கள் புதுக் கணக்கை அந்த நாளில்தான் தொடங்குகிறார்கள். ஆனால் தீபாவளியை ஏன் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்.

நமக்குள் இருக்கும் இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறார். இந்த ஜோதிவடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். .தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.

தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.

ஒவ்வொருவர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, போன்ற தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.என்பது தத்துவம். தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.

கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.

இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.

கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவுற்றது. இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீஸ்வரர்’ உருவமெடுத்தார். கணவன் மணைவி ஒற்றுமையுடன் இருந்தால் இந்த நாடே சொர்கமாக காட்ச்சி அளிக்கும் என்பதே நிஜம் அதுவே ‘அர்த்தநாரீஸ்வரர்’ உறுவம் என்னில் சரி பாதி நீ உன்னில் சரி பாதி நாம் என்ற தத்துவமே……..அன்பே சிவம்………..

தீபாவளி அன்று இதனை செய்தால் லக்ஷ்மி கடாக்ஷ்ம் பெறுகும்….

லக்ஷ்மி கடாக்ஷ்சம் பெருக வேண்டுமானால் தீபாவளி அன்று இதனை ஒவ்வொறு வருடமும் செய்து அஷ்ட லக்ஷ்மி அருள் பெறுவதற்க்கு ஒரு எழிய வழி..

உலக நலனுக்காகவும் உங்களின் நல்ல என்னத்திற்க்காகவும் வெள்ளை மொச்சை 1 கிலோ , சுத்தமான நெய் 1கிலோ , வெள்ளி காசு , ரூபாய் நாணையம் , விளக்குகளுக்கு ஏற்றவாறு அகல்விளக்கு 6,15,24,33 உங்களுக்கு ஏற்றது போல எடுத்து கொள்ளவும்.  தலவாழை இலை 1 எடுத்து கொண்டு குறிப்பிடும் முறை படி பூஜை செய்ய வேண்டும்.

முதலில் வாழை இலையை போடவும் பின்பு சுடு தண்ணீரில் அலசிய வெள்ளை மொச்சையை இலையின் மீது பரப்பவும் பின்பு காசுகளை பதிய வைக்கவும் வெள்ளைய் மொச்சையின் மீது பின்பு அகல் விளக்குனை காசு மேல் வைக்கவும் பின்பு நெய்யை ஊற்றவேண்டும் பிறகு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும் தீபம் ஏற்றும் போது ஓம் ரீம் தனம் அனுகிரஹ ஆகர்ஷ ஆகர்ஷ என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். ஏதாவது இனிப்பு பிராசாதம் இறைவனுக்கு படைக்க வேண்டும்.பிறகு விளக்கின் அருகில் ஏதாவது ஒரு விரிப்பு விரித்து விட்டு அதன் மேல் அமர வேண்டும் பிறகு ஓம் ரீம் தனம் அனுகிரஹ ஆகர்ஷ ஆகர்ஷ என்ற மந்திரத்தை அரை மணி நேரம் சொல்ல வேண்டும்.

ஓம் ……..ஹ்ரீம்…….க்ளீம் சௌம்……..ஸ்ரீம்……கும் குபேராய……….. நரவாகனாயயக்ஷ ராஜாய…… தன தான்யாதி பதியே………… லக்ஷ்மி புத்ராய……ஸ்ரீம்…….. ஓம்……. குபேராய நமஹ………!

என்ற மந்திரத்தையும் சொல்லலாம்,  லக்ஷ்மி மந்திரங்களையும் சொல்லலாம். நீங்கள் அமரும் போது கிழக்கு அல்லது வடக்கு பார்த்து தான் உட்கார வேண்டும்.

இதனை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்வது மிகவும் சிறப்பு தரும் முடியா விட்டால் தீபாவளி அன்று மட்டுமாவது செய்யுங்கள்.

உங்களிடம் இறைவன் ஆசீர்வாதம் மூலம் பெறபட்ட வீட்டில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் ,தனம் , தான்யம் , வஸ்த்திரம் அவைகளுக்கு மானசீகமாக நன்றிகள் சொல்லுங்கள்.

ஏன் தெரியுமா உங்களை விட திரமைசாலிகள் வாழும் பூமியில் இவைகளை உங்களுக்கு பரிசாக வழங்கிய இறைவனுக்கு நன்றிகள் சொல்லும் நாளே தீபாவளி.

உங்களுக்காகவே வாழும் உறவுகளுக்கு ,நன்பர்களுக்கு , நன்றிகள் சொல்லுங்கள் நீங்கள் தான் முதலில் சொல்ல வேண்டும் அவர்களிடம் எதிர் பார்த்து காத்திருக்க வேண்டாம். யாரிடமும் இந்த எதிர் பார்ப்புகள் என்றுமே கூடாது.முக்கியமாக கணவன் மனைவிக்கும் சொல்லுங்கள் மனைவி கணவனுக்கும் சொல்லுங்கள்.

கணவன் மார்கள் அனைவருக்கும் கோபம் வந்தால் கத்த தான் தெரியும் மனைவி இல்லாமல் ஒரு நாள் வாழ்வதே கடினம் அடியேனும் இதற்க்கு விதி விலக்கு இல்லை .மனைவிமார்களுக்கு கோபம் வந்தால் முகத்தைய் கோபமாக வைத்து கொள்ள தான் முடியும் தவிற மறு வினாடியே என் புருஷனுக்கு இதை தவிற என்ன தெரியும் என்று அவர்கள் வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் இது தான் கணவன் மனைவி வாழ்க்கை…

மஹாலக்ஷ்மி ஆசிகளை முழுவதுமாக வாங்க நினைக்கும் அன்பர்கள் அனைவரும் மனைவிக்கு நன்றிகள் சொல்லுங்கள் . மனைவி கணவனுக்கு நன்றிகள் சொல்லுங்கள் பிள்ளைகள் தாய் தந்தையர்களுக்கு நன்றிகள் சொல்லுங்கள். உங்கள் அண்ணன் தம்பி அக்கா தங்கை அனைவருக்கும் நன்றிகள் சொல்லுங்கள். கணவன் மணைவி பிரச்சனைகள் உள்ளவர்கள் இதனை செய்தால் உங்கள் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் கூட்டாக தான் செய்ய வேண்டும்.

கணவன் மார்கள் வேளை நிமித்தமாக உள்ளவர்கள் மட்டுமே தனியாக செய்ய வேண்டும்.குடும்ப பிரச்சனைகள் இருப்பவருக்கும் இதுவே சாறும்.வாழ இலை கிடைக்காத அன்பர்கள் ஒரு தட்டில் கூட வைத்து பூஜை செய்து கொள்ளலாம். பூஜை செய்ய முடியாத அனபர்கள் இந்த மூன்று நாட்களில் ஏதவாது ஒரு நாளில் ஆவது பூஜையைய் செய்து கொள்ளலாம்.  இதனையும் செய்ய முடியாதவர்களுக்கு வேறு ஒரு நாள் செய்து கொள்ளலாம், அதாவது அது கார்த்திகை தீபம் அன்று.

தீபாவளி அன்று முதல் தொடங்கி மூன்று நாட்கள் தொடர்ந்து செய்யுங்கள். சதுர்தசி , அமாவாசை , பிரதமை , மூன்று நாட்கள்…

20:11:2020 அன்று மங்களம் நிறைந்த பொருட்கள் ,ஏழை குழந்தகளுக்கு வஸ்த்திர தானம், இனிப்பு , காரம் , உங்களால் முடியாவிட்டால் உங்கள் இல்லத்திற்க்கு அழைத்து வந்து அன்பு உபசரிப்பு செய்யுங்கள் அல்லது அவர்களுடை இல்லத்திற்க்கு சென்று அவர்களிடம் கொஞ்சம் நேரம் அன்பாக பழகுங்கள்.

21:11:2020 அமாவாசை அன்று பிள்ளைகளால் கைய் விடப்பட்ட பெரியோர்களுக்கு , தனிமையில் வாழும் மனிதர்களுக்கு ,சாதுக்களுக்கும் உங்கள் அன்பு பரிசாக வஸ்திர தானம் , முழு சாப்பாடு அண்ண தானம் , செய்வது உத்தமம் முடியா விட்டால் அவர்களிடம் அன்பாக சில வார்த்தைகள் மனதை விட்டு பேசுங்கள்.

22:11:2020 அன்று தாய் தந்தையர்களிடம் அல்லது வயது முதியவர்களிடம் உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதனை கொடுத்து ஆசீர்வாதம் வாங்கி கொள்வது நல்லது. உங்கள் அருகாமையில் கணவன் மனைவி உறவுகளுக்கு ஒரு முக்கியதுவத்ததை கொடுத்து வாழ தெரிந்தவர்களுக்கு மங்களகரமான அன்பு பரிசாக உங்களால் அவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று மானசீகமாக தோன்றுதோ அதனை கொடுங்கள்…

மூன்று நாட்களும் விடியற்காலை வேலையில் பூஜையைய் செய்யுங்கள் இயல வில்லை எனறால் தீபாவளி மட்டுமாவது செய்யுங்கள்..

இந்த மூன்று நாட்களுக்கு மது மாமிசம் தொடவே கூடாது அசைவம் எதுவுமே சாப்பிட கூடாது.சில வக்கிர எண்ணம் கொண்ட மனிதர்களின் சதி வேலையில் எல்லோறும் தனம் படைத்தவர்களாக இருக்க கூடாது என்று சில தவறான பழக்க வழக்கங்களை கற்று கொடுத்து விட்டார்கள் அது தான் ஆன்மீகம் என்று அந்த தவறினை கற்று கொடுத்து விட்டார்கள் அதிலே நீங்களும் சிக்கி கொண்டு உங்கள் பிள்ளைகளையும் சிக்க வைக்க வேண்டாம் .

புனிதமான பாரம்பரியம் மிக்க நாளான தீபாவளி நாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!!!