சென்னை: நாடு முழுவதும் நவம்பர் 4ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு விரைவு பேருந்தில் இன்றுமுதல் முன்பதிவு தொடங்குகிறது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை (Diwali Festival) நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. அதன்படி இதற்காக நகரங்ஙகளில் வசிப்பவர்கள், அலுவலகங்களில் பணி புரிவோர் தங்களது சொந்த ஊருக்கு செல்வதும் வழக்கம். இந்த முறை தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருகிறது. இடையில் வெள்ளிக்கிழமை ஒருநாள் வேலைநாள். அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் கூடுதலாக ஒருநாள் (வெள்ளிக்கிழமை) விடுப்பு எடுத்தால் 4 நாட்கள் விடுப்பு கிடைக்கும். இதனால் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியூர்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த ஆண்டு 4ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், கூடுதலாக அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அரசு பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். அதன்படி, அடுத்த மாதம் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு இன்று தொடங்குகிகிறது.
டிஎன்எஸ்டிசி என்கிற அரசு செயலி மற்றும் இணையதளங்களில் பொதுமக்கள் தங்களுக்கான பயணச்சீட்டுக்களை புக் செய்துகொள்ளலாம். அதுபோல தனியாா் போக்குவரத்து செயலிகள் மற்றும் ஆன்லைன் வழியாகவும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.