சென்னை

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் அப்போது தனது சகோதரர் தீபக் சசிகலாவுடன் சதி செய்து ஜெயலலிதாவை கொன்றதாக புகார் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று திடீரென்று ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு தீபா வந்தார்.

அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பிறகு தீபா தன் கணவர் மாதவனுடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

தீபா கூறியது பின் வருமாறு.

”தீபக் தான் என்னை போயஸ் கார்டன் வருமாறு சொன்னார்.

அங்கு வந்து என் அத்தை ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தச் சொன்னார்

என்னை உள்ளேவிடுவதில்லை என்பதால் நான் மறுத்தேன்.

ஆனால் தான் இருப்பதாகவும், பார்த்துக் கொள்வதாகவும் தீபக் சொன்னார்

அதை நம்பி வந்த என்னை உள்ளே அனுமதிக்கவில்லை.

போயஸ் மாளிகையினுள் இரு குண்டர்கள் மட்டுமே உள்ளனர்.

அவர்கள் என்னையும், உடன் வந்த பத்திரிகையாளர்களையும் தாக்கி விரட்டி விட்டனர்.

இதற்கெல்லாம் காரணம் தீபக்கும் சசிகலாவும் தான்.

நான் போயஸ் கார்டன் வீட்டில் என் உரிமையைக் கோரி டில்லி கோர்ட் செல்ல உள்ளேன்.

அதனால் என்னை அத்துமீறி போயஸ் வீட்டில் நுழைந்ததகாகக் காட்டவே இந்த சதி..

தீபக் சசிகலாவுடன் இணைந்து எனக்கு மற்றொரு தாயாக இருந்த என் அத்தை ஜெயலலிதாவைக் கொன்று விட்டார்.

அது மட்டும் அல்ல, எனக்கும், என் கணவருக்கும் கூட தீபக்கால் ஆபத்து நேரிடக் கூடும்.

உடனடியாக எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும்.

பிரதமரை சந்தித்து இது பற்றி பேச அப்பாயின்மெண்ட் கேட்டுள்ளேன்.

அது கிடைத்ததும் தீபக் மீதும், சசிகலா மீதும் கூ ட்டு சதி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் பிரதமரிடம் நேரடியாக புகார் கொடுக்க உள்ளேன்.

போயஸ் கார்டன் வீட்டில் ஏதோ தவறு உள்ளதால் தான் என்னை உள்ளே விட மறுக்கிறார்கள்.

அந்த மர்மம் விரைவில் வெளியே வரும்”

இவ்வாறு  தீபா தெரிவித்தார்.