சென்னை:
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின்  2வது நிலை வாரிசுகள் என தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதி மன்றம், தற்போது, அவர்கள் இருவரும் நேரடி வாரிசுகள் என தீர்ப்பை திருத்தி உள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து, அவரது  சொத்துக்களை பராமரிக்க ஒருவரை நியமிக்க வேண்டும் என்று அதிமுக பிரமுகர் புகழேந்தி, ஜனார்த்தனன் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.  இந்த வழக்கு ‘ நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
வழக்கில், கடந்த 27ந்தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஜெயலலிதாவின்  அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ.  தீபக் மற்றும் ஜெ. தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் 2ம் நிலை வாரிசுதாரர்கள் என்றும், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக தமிழகஅரசின் முடிவை மறுபரிசீலனை செய்யும்படியும்  பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பில் இன்று நீதிபதிகள் முக்கிய திருத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீபா, தீபக் என இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.