நாமக்கல்,
தமிழகத்தில் முட்டை விலை கடந்த ஒரு மாதமா கிடுகிடு வென உயர்ந்து வந்தது. இதன் காரணமாக முட்டை விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டு பெரும் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக முட்டை விலை குறைய தொடங்கி உள்ளது.
கடந்த ஒரு மாதமாக முட்டையின் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. 4 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த முட்டை ரூ.6.50 மற்றும் 7 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஓட்டல்களில் ஆம்லேட்களும் விலை உயர்த்தப்பட்டன.
மேலும், சத்துணவிலும் முட்டை நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் பரவியது. இதன் காரணமாக எதிர்க்கட்சி களும் சத்துணவில் முட்டை வழங்குவதை நிறுத்தக்கூடாது என போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இந்நிலையில், விலை உயர்வு காரணமாக முட்டை விற்பனை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இதன் ஏராளமான முட்டைகள் நாமக்கல் பகுதியில் தேக்கம் அடைந்துள்ளன. இதையடுத்து முட்டை விலையை குறைக்க கோழி பன்னையாளர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, முட்டையின் கொள்முதல் விலை 11 காசுகள் குறைக்கப்பட்டு 5 ரூபாய் 5 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முட்டை விலை குறைந்து வருகிறது. வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.