பிரபல பின்னணிப் பாடகி எல். ஆர். ஈஸ்வரி பிறந்த தினம் இன்று (டிசம்பர் 7 -1939).

பரமக்குடிக்கு அருகே இளையான்குடி என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோணி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தவர் லூர்து மேரி என்ற ஈசுவரி. இவரது தாயார் எம். ஆர். நிர்மலா ஜெமினி ஸ்டூடியோவில் குழுப்பாடகியாக இருந்தவர். ஈஸ்வரியின் இயற்பெயர் “லூர்துமேரி ராஜேஸ்வரி”  தனித்துவமான ர் இசைக்குரலால் உலக ரசிகர்களை தன்பக்கம் இழுத்த எல்.ஆர்.ஈஸ்வரி  1958ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் காலடி எடுத்து வைத்தார்,  ஆயிரக்கணக்கான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ள எல்.ஆர்.ஈஸ்வரியை தமிழகத்தின் மூலை  முடுக்கெல்லாம் கொன்று சேர்த்தது, செல்லாத்தா, மாரியம்மா எங்கள் மாரியம்மா போன்ற பக்திப்பாடல்கள்தான்.

இஅவர், எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே தந்தை (36) இறந்து விட்டார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல். ஆர். அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உண்டு. மனோகரா (1954) படத்திற்காக எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைப்பில் “இன்ப நாளிலே இதயம் பாடுதே” என்ற பாடலை ஜிக்கி குழுவினரோடு பாடினர். அப்பாடலில் தாய் நிர்மலாவுடன் இணைந்து ஈஸ்வரியும் குழுவினருடன் சேர்ந்து பாடினார். அன்று முதல் இவரும் குழுப் பாடகியானார்.

முதன் முதலில் தனியாகப் பாடும் சந்தர்ப்பம் நல்ல இடத்துச் சம்பந்தம் (1958) திரைப்படத்துக்காக கே. வி. மகாதேவனின் இசையமைப்பில் இவரே தான் அவரே அவரே தான் இவரே என்ற பாடலைப் பாடினார். இதுவே இவரது முதல் பாடலாகும். இதனையடுத்து 1959 இல் வெளிவந்த நாலு வேலி நிலம் படத்துக்காக திருச்சி லோகநாதனுடன் இணைந்து ஊரார் உறங்கையிலே என்ற பாடலைப் பாடினார்.  1961 இல் வெளிவந்த பாசமலர் திரைப்படத்தில் இவர் பாடிய வாராயென் தோழி என்ற பாடல் இவருக்கு மிகவும் புகழைத் தேடித்தந்த பாடல்.

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனால் அடையாளம் காணப்பட்டு, பாடல்கள் வளர்த்த பயணத்தில், விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் ‘பாச மல’ரின் ‘வாராயோ என் தொழி வாராயோ’ எனும் அசத்தலான பாடலுக்குப் பின் அதிகம் பேசப்பட்டார். ‘கறுப்புப் பணம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆடவரெல்லாம் ஆட வரலாம்’ பாடல் அவரது குரலின் வேறொரு வலுவைக் காட்டியது. பின்னாளில் கேபரே வகை நடனத்துக்கான பாடல்கள் என்றாலே ஈஸ்வரிதான் என்றாயிற்று. ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ (வல்லவன் ஒருவன்), ‘அதிசய உலகம்’ (கௌரவம்) என்று போகும் வரிசையில் அவருடைய குரல்களில் இழையும் பரவசமும், கொண்டாட்டமும் புதிதான இழைகளில் நெய்யப்பட்டிருக்கும். ‘குடி மகனே’ (வசந்த மாளிகை) பாடலில் ‘கடலென்ன ஆழமோ..கருவிழி ஆழமோ..’ என்ற ஏற்ற இறக்கங்களும் சேர எல்ஆர்.ஈஸ்வரின் புகழ் திரையுலகம் மட்டுமின்றி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவியது.

 ‘காதோடு தான் நான் பாடுவேன்’ (வெள்ளி விழா) என்ற அற்புதமான மென்குரலை வழங்கிய அவரால், ‘அடி என்னடி உலகம்’ (அவள் ஒரு தொடர்கதை) போன்ற பாடல்களும் ஹிட் அடிக்க, சிவாஜி ஜெயலலிதா இணைந்து நடித்த பட்டிக்காடா பட்டணமா படத்தில்  பாடிய  ‘கேட்டுக்கோடி உறுமி மேளம்’ மேலும் பரபரப்பாக பேசப்பட்டது.

எல்ஆர்ஈஸ்வரியின் குரல், வேதனை, பரிதவிப்பு, தாபம், உயிர், உணர்ச்சிகளை ஆட்டுவிக்கும் வகையில் இனிமையாக இருந்தது.  பல்வேறு இசையமைப்பாளர்களுடைய இசைந்து பாட்டியிருப்பதுடன், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று வெவ்வேறு மொழியிலும் பாடி தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். எழுபதுகளின் பிற்பகுதியில் ஈஸ்வரிக்கு திரைப்பட வாய்ப்புக் குறைந்தது. இருந்தாலும் பக்திப் பாடல்களை தொடர்ந்து பாடி வருகிறார். தற்போது வெளியாகி உள்ள  நயன்தாரா, பாலாஜி நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்திலும் ஒரு பாடலை பாடி அசத்தி உள்ளார்.

இன்று அவரது பிறந்த தினம். அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதில் பத்திரிகை.காம் இணையதளமும் மகிழ்ச்சி அடைகிறது.