டிசம்பர் 26, 2004 அன்று இந்தியப் பெருங்கடலில் சுமத்திரா தீவுக்கு மேற்கே, மேற்குக் கரையோரத்தில் 30 கி.மீ. ஆழத்தில் பெரிய நிலநடுக்கம் நிகழ்ந்தது. இது 9.3 ரிக்டர் அளவாக இருந்தது. இந்த ஆழிப்பேரலையால் தமிழ்நாடு உள்பட இந்தியாவில் பேரழிவு ஏற்பட்டது. இந்த கொடூர நிகழ்வின் 18வது ஆண்டின் நினைவு தினம் இன்று.

இந்திய மண்ணில் ‘சுனாமி’ ஏற்படுத்திய சோகம் மக்களின் மனதை விட்டு இன்னும் மறையவில்லை. 2004 டிச., 26ல் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின்  வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்துஎழும்பிய ஆழிப் பேரலைகள் இந்தோனேஷியா, இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் கடலோர பகுதிகளை வாரி சுருட்டியது. இதன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஆழிப்பேரலை  தாக்கியதில் 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர்.  சுனாமியின்போது பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் ஏராளம். கடலோரப் பகுதியில் அன்றைக்கு எழுந்த மரண ஓலம் அடங்க பல ஆண்டு காலம் ஆனது. ஆனால், கடல் அலை போல இன்னும் துயரச் சுவடுகள்தான் மறையவே இல்லை.

இந்தியாவில் உயிரிழந்தோர் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி 6,400 பேர், தமிழகத்தில் மட்டும் 2,758 பேர், ஆனால் 7000 பேர் வரை சுனாமியால் காணாமல் போன தாக கூறப்படுகிறது. புதுவையில் 377 பேர். தென்னிந்தியாவின் மொத்த பொருளாதார இழப்பில் 50 விழுக்காட்டை(சுமார் ரூ.4,700 கோடி) அளவுக்கு, தமிழகம் சந்தித்தது .

17 ஆண்டுகளாக கடற்கரையோரம் அந்த சோக கீதம் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது. கடலோர மக்கள் அஞ்சலி இன்றைக்கு சென்னை முதல் குமரி வரை கடலோரம் வசிக்கும் கிராம மக்கள், கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி, இறந்துபோனவர்களுக்காக அஞ்சலி செலுத்துகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், மீனவ அமைப்பினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, தங்களுடைய ஆறுதலையும் தெரிவிக்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது.

உயிர் சேதத்துடன், கோடிக் கணக்கில் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி சுனாமி மற்றும் ஆழிப்பேரலை என்ற வார்த்தை  இதற்கு முன் இந்தியர்களிடையே சுனாமி என்ற வார்த்தையை இந்தியர்கள் கேள்விப்பட்டதில்லை.  ஆனால் 2004ம் ஆண்டு கடல் பொங்கி, ‘கடல் அலை’ ஊருக்குள் வந்தபோது தான் ‘சுனாமி’ என தெரிந்தது.  வெறும் பத்து நிமிடத்தில் பல லட்சம் பேரை கடலுக்குள் இழுத்துச்சென்று தனது கோபத்தை தணித்தது. இந்த பேரழிவு  ஏற்படுத்திய சோகம் என்றும் அழிவதில்லை. ஏற்படும் விதம் ‘சுனாமி’ என்பது ஜப்பானிய மொழி சொல். ‘துறைமுக அலை’ எனப் பொருள். ‘ஆழிப்பேரலை’ எனவும் அழைக்கப்படுகிறது.