சென்னை: திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் டிசம்பர் 18ந்தேதி சென்னையில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

சென்னையில் வரும்  (டிசம்பர்) 18ம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்  நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் டிச.18ம் தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் நடைபெறும். இதில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில், கட்சியின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.