சென்னை
தமிழ்க சட்டசபையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு குறித்து விவாதம் நடந்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கான நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட தொடங்கி விட்டன. நேற்று இரவூ தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதன் மூலம் மீண்டும் அதிமுக-பாஜக இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இன்று அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்புகுறித்து அதிமுக உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் விவாதம் நடந்தது.
அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜு: அதிமுக என்ற கட்சியே கணக்கு கேட்டதால்தான் ஆரம்பிக்கப்பட்டது. 2026ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து, எங்கள் கணக்கை தொடங்குவோம்”
அமைச்சர் தங்கம் தென்னரசு: நீங்கள் சொல்வது சரிதான்… கணக்கு கேட்டு ஆரம்பித்த அதிமுக, இப்போது தப்புக் கணக்குதான் போடுகிறது.”
அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போட்ட கணக்கு சரியாகத்தான் இருக்கும். கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக இருக்கும்.
அமைச்சர் ஐ.பெரியசாமி: அண்ணாவையும் மறந்து விட்டீர்கள்.. அம்மாவையும் (ஜெயலலிதா) மறந்துவிட்டீர்கள்.
அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி: எங்களை எல்லாம் ஆளாக்கிய அம்மாவை என்றைக்கும் மறக்க மாட்டோம்.
என்று விவாதம் நடந்தது.