சென்னை:
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில், பாரத மாதாவையும், இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தும் நோக்கில் கண்காட்சி நடைபெற்றது.
இது சர்ச்சையை படுத்திய நிலையில், லயோலா கல்லூரி நிர்வாகம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில் பாரத மாதாவுக்கு மீடு என்ற பெயரில் ஓவியங்களும், இந்து கடவுள்களின் ஆயுதங்களான சூலத்தை கேவலப்படுத்தும் வகையிலும், இந்து பெண்களை அசிக்கப்படுத்தும் நோக்கிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பாஜக சார்பில் காவல்துறை யிலும் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் போராட்டமும் அறிவிக்கப்பட்டது.
இந்த கண்காட்சி இந்துக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், பாரதமாதா இழிவு படுத்தப்பட்டது விவாதங்களை உருவாக்கியது. பாரதமாதாவை இழிவுபடுத்தியவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், லயோலா கல்லூரி நிர்வாகத்தை முடக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை உருவாக்கி வந்தது.
இந்த நிலையில், தங்களது செயலுக்கு வருந்துவதாக லயோ கல்லுரி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலான எந்த செயலையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. வீதி விருது விழாவுக்கு நாங்கள் கொடுத்த அனுமதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களின் கவனத்துக்கு வந்தவுடன் கண்காட்சியில் இருந்த சர்ச்சை ஓவியங்கள் நீக்கப்பட்டனஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலான எந்த செயலையும் நாங்கள் ஆதரிக்கவில்லை என்றும், நடைபெற்ற நிகழ்வுக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறி உள்ளது.
லயோலா கலை இலக்கிய பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காளீஸ்வரன் பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.