அலகாபாத்: இந்தியாவின் பல வடமாநிலங்கள் வெள்ளத்தால் மிதக்கிறது என்றும், பலி எண்ணிக்கை 100 ஐ தொடும் நிலையில் உள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக உத்திரப்பிரதேச மாநிலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அம்மாநிலத்தின் கிழக்குப் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்திரப்பிரதேசத்தில் மட்டும் இதுவரை 73 பேர் இறந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. அங்கு பெரும்பாலான மாவட்டங்களில் ரெட் அலர்ட் பிறப்பித்துள்ளதாம் வானிலை ஆய்வு மையம்.

பீகாரைப் பொறுத்தவரை, தலைநகர் பாட்னாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் செல்லும் பல ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளையும் செவ்வாய்க்கிழமை வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மாநிலங்கள் தவிர, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்ரகாண்ட் மற்றும் காஷ்மீர் மாநிலங்களிலம் சில நாட்களாக பலத்த மழை பெய்துள்ளது. பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன என்று தொடர்ந்து வரும் தகவல்கள் உறுதிசெய்கின்றன.