தேனி

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் தீயில் சிக்கி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் தீ பிடித்தது.   கட்டுப்படுத்த முடியாத இந்த தீயில் சென்னை, கோவை, ஈரோடு பகுதியை சேர்ந்த சிலர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் சிக்கிக் கொண்டனர்.   தீயில் சிக்கிக் கொண்ட 39 பேரில் 9 பேர் பிணமாகவும் 30 பேர் படுகாயங்களுடனும் மீட்கப்பட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர்.   அதனால் சாவு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.   இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈரோடை சேர்ந்த சதீஷ் என்பவர் மரணம் அடைந்துள்ளார்.     இதனால் தற்போது இந்த காட்டு தீக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆகி உள்ளது.