சென்னை:
குரங்கணி காட்டுத் தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கடந்த 11ம் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 9 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 27 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இதில் 20 பேர் வரை உயிரிழந்துவிட்டனர். இந்த வகையில் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த பார்கவி என்ற பெண் இன்று உயிரிழந்தார். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.