சென்னை:

சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியில் மழையால் பலியோனோர் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது.

சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்றில் இருந்து அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.   70 சதவிகிதமான இடங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை மழை வெள்ளம் காரணமாக  5 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

நேற்று தி நகரில் கிரியப்பா சாலையில் இடி விழுந்த அதிர்ச்சியில் பிரசாந்த் என்பவர் மரணமடைந்தார். அதேபோல் சென்னையின் ஓட்டேரியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த சாந்தா என்ற பெண்மணி  நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். சென்னை கொடுங்கையூர் ஆர் ஆர் நகரைச் சேர்ந்த 5 சிறுமிகள் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பாவனா என்ற 10 வயது சிறுமியும் யுவஸ்ரீ என்ற 8 வயது சிறுமியும் மின் இணைப்பு பெட்டியில் இருந்து அறுந்து தொங்கிய மின்கம்பியை தவறுதலாக மிதித்ததில் இருவரும் மின்சாரம் தாக்கி மரணமடைந்தனர்.

செங்கல்பட்டில் இருக்கும் இரண்டு மாடி கட்டிடம் மழையால் இடிந்து விழுந்தது.  .

இந்த நிலையில் மெரினா கடற்கரையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி முதியவர் ஒருவர் மரணமடைந்தார்.