மிர்த சரஸ்

ராக் நாட்டின் மொசூல் நகரில் இருந்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் சடலங்கள் அமிர்த சரஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

ஈராக் நாட்டில் உள்ள பெரு நகரங்களில் ஒன்றான மொசூல் நகரில் இந்தியாவை சேர்ந்த சிலர் பணி புரிந்து வந்தனர்.  அவர்களில் சிலரை(சுமார் 39 பேரை)  கடந்த 2014ஆம் ஆண்டு ஐ எஸ் பயங்கர வாதிகள் கடத்திச் சென்றனர்.    அவர்கள் நிலை குறித்து யாருக்கும் தெரியாமல் இருந்தது.   அவர்கள் நலமுடன் இருப்பதாக மத்திய அரசு பலமுறை தெரிவித்து வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடத்தப்பட்ட  இந்தியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.   அவர்களை அடையாளம் காண காணாமல் போனவர்களின் உறவினர்களின் மரபணு எடுக்கப்பட்டு சோதனை நடந்தது.   அதில் 39 பேரின் உடல்களில் 38 பேர் உடல் மரபணு சோதனையில் ஒத்து போனது.

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் வி கே சிங் ஈராக் சென்றார்.   அவர் 39 உடல்களையும் தனி விமானத்தில் அமிர்த சரஸ் நகருக்கு எடுத்து வந்துள்ளார்.  இறந்தவர்களில் பலர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.  மேலும் பீகார், இமாசல பிரதேசம், மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர்.

மத்திய அமைச்சர் வி கே சிங் உடல்களை உறவினர்களிடம் ஒப்ப்படைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டு கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.