டில்லி

க்களவையில் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன், “நடிகர் ரஜினிக்கு வரிச்சலுகை, ஆனால் விஜய்க்கு ஐடி ரெய்டா?” என கேள்வி கேட்டுள்ளார்.

பிரபல நடிகரான ரஜினிகாந்த் சரியான வருமானத்தைக் காட்டவில்லை என வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்து இருந்தது.  அதற்கு ரஜினிகாந்த் தாம் சிலருக்கு வட்டிக்கு பணம் அளித்ததாகவும் அதைத் தொழிலாகச் செய்யாததால் வருமானத்தில் காட்டவில்லை எனவும் தெரிவித்தார்.    இதை ஒப்புக் கொண்ட வருமான வரித்துறை வழக்கைத் திரும்ப பெற்றது.

நடிகர் விஜய் நடித்த பிகில் படம் தொடர்பான விவகாரத்தில் தயாரிப்பாளர், வினியோகஸ்தர் மற்றும் ஃபைனான்சியர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்தது.  அப்போது நடிகர் விஜய் வீட்டில் நடந்த சோதனிஅயை முன்னிட்டு அவரை படப்பிடிப்பு தளத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.  இது சர்ச்சையை உண்டாக்கியது.

விஜய் வீட்டில் நடந்த சோதனை குறித்து காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, மற்றும் சீமான்,முத்தரசன் உள்ளிடோர் கண்டனம் தெரிவித்தனர்.   நடிகர் விஜயை மிரட்ட இந்த சோதனை நடந்ததாக பலரும் தெரிவித்தனர்.   ஆயினும் திமுக தரப்பில் இந்த சோதனை குறித்து எவ்வித கருத்தும் கூறாமல் இருந்து வந்தது.

இன்று மக்களவிஅயில் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் தனது உரையில் நடுவில், “தமிழகத்தில் நடிக்ர் ரஜினிக்கு ரூ. 1 கோடி வரிச் சலுகை அளிக்கப்பட்டது சிறப்பான நடவடிக்கை.  அது உங்கள் விருப்பம்.  அதே வேளையில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை.  விஜய் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்து வரப்படுகிறார்.

இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பலருக்கு நஷ்டம் உண்டாகி இருக்கிறது.   ரஜினிக்கு ஒரு நிதி, விஜய்க்கு ஒரு நீதியா?” என கேள்விகள் எழுப்பினார்.   இந்நிலையில் சபாநாயகர் குறுக்கிட்டு தயாநிதி மாறன் பேச்சை நிறுத்தினார்.  அதன் பிறகு தயாநிதி மாறன் மற்ற விவகாரங்கள் குறித்து தொடர்ந்து பேசினார்.

சன் பிக்சர்ஸ் அடுத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதால் அது குறித்தோ விஜய் வீட்டில் நடந்த சோதனை குறித்தோ திமுக வாய் பேசாமல் உள்ளதாகப் பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.  ஆனால் அதற்கு பதில் அளிப்பது போல் இன்று தயாநிதி மாறன் இது குறித்துப் பேசி உள்ளார்.