டில்லி:
காங்கிரஸ் கட்சித்தலைவர் பதவியில் இருந்து, ராகுல்காந்தி ராஜினாமா செய்துள்ளதை தொடர்ந்து, உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஸ் ராவத் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவித்தார். ஆனால், அவரது ராஜினாமா காங்கிரஸ் தலைவர்கள் ஏற்க மறுத்து வந்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு சேவை செய்தது எனக்கு மரியாதையை கொடுத்தது என்று கூறிய ராகுல், நேற்று (ஜுலை 3ந்தேதி) தனது ராஜினாமாவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பொதுச்செயலாளரி பதவியை ராஜினாமா செய்வதாக முன்னாள் உத்தரகான்ட் முதல்வர் ஹரீஸ் ராவத் தெரிவித்துள்ளார்.
இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.