சென்னை: வடகிழக்கு பருவமழையார் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு குறித்து கடந்த 3 நாட்களாக நேரடி ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 4வது நாளாக, மெரினா கடற்கரை அருகே உள்ள எழிலகம் கட்டித்தில் செயல்பட்டு  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் தி.நகர் சென்று மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.  வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றதழுத்த மண்டலம் காரணமாக, சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை கொட்டி வருகிறது. இந்த மழையானது நாளை (11ந்தேதி) வரை நீட்டிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மழையின் கோரத்தாண்டவத்தால், சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அத்துடன் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் , சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வெள்ள நீரை வெளியேற்றும் பணியுல் சென்னை மாநகராட்சி ஊழியர்கள், சமூக நல ஆர்வலர்கள், பேரிடர் மீட்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையின் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து கடந்த 3 நாட்களாக நேரடியாக ஆய்வு செய்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின் இன்று 4வது நாளாக,   ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று காலை, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில்  நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்போது, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது . பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடக்கின்றன. வாக்களித்த மக்களுக்கு எந்த நோக்கத்திற்கு வாக்களித்தார்களோ  அதை செய்வோம்.  நிவாரண பணிகளை தொடர்ந்து செய்வோம் என்றார்.

இதுபோன்ற கொட்டும் மழையில் ஆய்வு செய்வது எனக்கு புதிதல்ல; மழை பெய்தால் எங்கே பிளாக் வரும் என தெரியும்.  அதை ஆராய்ந்து அதற்கான நிவாரணப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக  ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எதுவும் செய்யாமல் லஞ்சம் வாங்கி ஊழலில் திளைத்ததால தான் இப்போது  இவ்வளவு பிரச்சனை.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சென்னை, தியாகராய நகர், விஜயராகவா சாலையில் உள்ள கால்வாயில் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கழிவுகளை அகற்றும் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.