சென்னை:
ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னர் விலகி உள்ளார்.
சமீபத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டேவிட் வார்னர் விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஆஸ்திரேலிய அணி தலைவர், துணைத்தலைவர் பொறுப்பு களில் இருந்து ஸ்டீவ் சுமித், டேவிட் வார்னர் மற்றும், கேமரான் பேன்கிராப்ட் ஆகியோரை நீக்கி பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், வரும் (ஏப்ரல்) 7ந்தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்டீவ் சுமித்தை நீக்கி அந்த அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்த நிலையில், சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணைத்தலைவரான டேவிட் வார்னரும் விலகி உள்ளார்.
இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.