ஐதராபாத்
ஐபில் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர டேவிட் வார்னர் விலகுகிறார்.
வரும் ஏப்ரல் 7 முதல் ஐபில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் ஆஸ்திரேலியாவின் ஸ்மித்துக்கு ராஜஸ்தான் அணியின் தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு முன்பு, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் பந்தயத்தின் போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப் படுத்த முயன்றது தொலைக்காட்சி பதிவு மூலம் தெரிய வந்தது. இதற்கு அணியின் தலைவர் ஸ்மித்தும் பொறுப்பேற்றுக் கொண்டு ஆஸ்திரேலிய அணித்தலைவர் பதவியில் இருந்து விலகினர்.
அத்துடன் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணித் தலைவர் பதவியில் இருந்தும் விலகினார். அந்த அணியின் தலைமப் பொறுப்பு இந்த வீரர் அஜிங்க்யா ரஹானேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் துணைத் தலைவரான டேவிட் வார்னர் ஐபில் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமப் பொறுப்பில் உள்ளார்.
தற்போது டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகி உள்ளார். பத்திரிகையாளர்களிடம் இந்த தகவலை அளித்த ஐதராபாத் அணியின் செயல் அதிகாரி சண்முகம் விரைவில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறி உள்ளார். புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட நியுசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் மற்றும் இந்திய வீரர் ஷிகர் தவான் ஆகியோருக்கு வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஐதராபாத் அணித்தலைவராக ஷிகர் தவான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அனத்தி ஐபில் அணிகளின் தலைவராக இந்தியர்களே இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.